யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் போராட்ட பேரணி!

Date:

சர்வதேச நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாபெரும் போராட்ட பேரணியொன்றை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த மாபெரும் போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேரணியானது யாழ்ப்பாணம் – ஆரியகுளம் சந்தியில் இன்று (30)   பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி – காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்துள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இந்த பேரணி இடம்பெற்றுள்ளது.

https://x.com/Vinojana9/status/1829433607863333143

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கைகளில் தீச்சட்டி ஏந்தியவாறு வலி சுமந்த கண்களுடன் பேரணியில் பங்கேற்றிருந்தனர்.

இப்பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...