‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா – 2024’ நாளை (09) ஆரம்பமாகி எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளன.
யாழ்ப்பாணத்தில், உள்ளூர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றமானது இந்த புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, இந்த புத்தக திருவிழாவானது, யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நாளை (09) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(11) மாலை வரை நடைபெறவுள்ளது.
இலங்கையிலிருந்து மட்டுமன்றி, பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறுபட்ட புத்தக விற்பனை நிறுவனங்கள் மற்றும் வெளியீட்டகங்களின் புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.