யுனானி மருத்துவ துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏற்பாடு!

Date:

யுனானி மருத்துவத் துறைக்கு காட்டப்படும் மாற்றான் தாய் மனப்பான்மை தொடர்பில் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தலைவரும் தேசிய சூரா சபையின் அரசியல் உப குழுவின் தலைவருமான ஷாம் நவாஸ் newsnowக்குத் தெரிவித்தார்.

யுனானி மருத்துவத் துறை தற்பொழுது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து அரச யுனானி மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் Dr பீ. எம். ரிஷாட் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் மற்றும் தேசிய ஷூராவின் அரசியல் உப குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்ததாகக் கூறிய ஷாம் நவாஸ், இது தொடர்பில் சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

யுனானி மருத்துவர்களுக்கான ஒரேயொரு போதனா வைத்தியசாலையாக பொரல்ல தேசிய ஆயுர்வேத வைத்தியசாலை மட்டுமே காணப்படுகிறது. இங்கு யுனானி மருத்துவ நிபுணர்களின் (consultants) எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியிருக்கிறது எனவும்

வைத்தியசாலைகளில் யுனானி மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது எனவும், தேசிய ஆயுர்வேத மருத்துவமனையில் விடுதிகளை (ward) ஒதுக்குவதில் அலட்சியப் போக்கு காணப்படுவதாகவும் 20 கட்டில்களைக் கொண்ட 5 வார்டுகளாவது யுனானி மருத்துவத்துக்காக ஒதுக்க வேண்டியிருக்கிறது எனவும்,

சித்த வைத்தியம் மற்றும் ஆயுர்வேத த் துறைக்கென 2 கற்கை பீடங்கள் (Faculty) காணப்படுவதாகவும், ஆனாலும் 1929 இல் ஆரம்பிக்கப்பட்ட யுனானி மருத்துவத் துறைக்கு சுதேச மருத்துவ பீடத்தில் 2 பிரிவுகள் (department) மாத்திரமே காணப்படுவதாகவும் இதனால் இந்த இரண்டு யுனானி பிரிவுகளையும் இணைத்து ஒரு பீடமாக மாற்றுவதோடு மற்றுமொரு அரச பல்கலைக்கழகத்திலும் புதிதாக கற்கை பீடமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டியிருக்கிறது எனவும், ஆயுர்வேதப் பிரிவு மற்றும் சுதேச மருத்துவ சுகாதாரத் துறைகளின் கமிட்டிகள், சபைகள் மற்றும் கவுன்சில்களில் யுனானி மருத்துவத் துறை பல சந்தர்ப்பங்களிலும் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் ஆயுர்வேத துறையின் கமிட்டிகளில் யுனானி பிரதிநிதித்துவத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது எனவும் டொக்டர் பீ.எம். ரிஷாட் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...