ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் குறித்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார என்பவரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இது குறித்த முறைப்பாட்டை முன்வைத்திருந்தனர்.
இந்த விடயங்களை ஊடகங்களும் தேர்தல் செய்திகளின் போது அறிந்து கொள்ள வேண்டும் என ஊடகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
இல்லாவிட்டால், இங்கு பலர் வந்து மைக்கை பிடித்து, பேசத் தொடங்கினால் எல்லோரும் மேதைகள் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார்.