நேற்று (09) தெற்கு லெபனானின் சிடோன் நகரில் பொதுமக்கள் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் மற்றொரு ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்.
ஹமாஸ் அறிக்கையில், சமர் அல்-ஹாஜ் என்ற ஹமாஸ் தலைவர் வீரமரணம் அடைந்தார். சியோனிச ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம், தெற்கு லெபனானில் உள்ள, சிடோனில் உள்ள ஐன் அல்-ஹில்வே அகதிகள் முகாமில் ஒரு படுகொலையை நடத்தியுள்ளதாக தெரிவித்தது.
ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பிறகு எரிந்த காரில் அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.