வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய தகவல்!

Date:

இலங்கையில் வருடாந்தம் நடத்தப்படும் வாகன புகை பரிசோதனையில் 20 வீதமான வாகனங்கள் தோல்வியடைவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பரிசோதனை செய்யும் வாகனங்கள் தரமானதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வாகன புகைப்பரிசோதனை சான்றிதழை பெற்றுக்கொள்வதோடு, வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி போன்றவற்றையும் ஒரே இடத்தில் வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் இரண்டு மாதங்களுக்குள் இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...