ஸம் ஸம் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு பாட நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (17) சனிக்கிழமை கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி கற்கைகள் பீடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஆறு மாதம் மற்றும் ஒருவருடக் கற்கைகளைக் கொண்ட பள்ளிவாயல் இமாம்களை வலுப்படுத்தும் VIP பாடநெறி, சமூக மற்றும் மத தலைவர்களுக்கான “சங்கல்ப“ பாடநெறி, கல்வித்துறை நிர்வாகிகளுக்கான Mini MBA பாடநெறி, இஸ்லாம் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் குறித்த அடிப்படை அறிவை வழங்கும் BIS பாடநெறி, அரபுக் கலாசாலைகளில் இறுதி வருடங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஆளுமை விருத்திக்கான ECTS பாட நெறி ஆகிய ஐந்து பாடநெறிகளைப் பூர்த்தி செய்த 300 இற்கும் மேற்பட்டவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.