ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த விடுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே குண்டு பொருத்தப்பட்டது!

Date:

ஈரான் ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தெஹ்ரான் வந்திருந்த நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹினியா தங்கியிருந்த விடுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே குண்டு பொருத்தப்பட்டுள்ளதாகவும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாகவும் அமெரிக்கவிலிருந்து வெளியாகின்ற ‘த நியூயோர்க் டைம்ஸ்’ நேற்று (01) செய்தி வெளியிட்டுள்ளது.

5 மத்தியக் கிழக்கு அதிகாரிகளையும் ஒரு அமெரிக்க அதிகாரியையும் மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர படைகளே (IRGC) விடுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெஹ்ரானுக்கு விஜயம் செய்த பல சந்தர்ப்பங்களிலும் ஹனியாவுக்கு இந்த விடுதியையே தங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது. புதனன்று இவரது மெய்ப்பாதுகாவலரும் இங்கு தங்கியிருந்த வேளையிலேயே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டு தாக்குதலுக்கு இஸ்ரேல் இதுவரை பொறுப்புக்கூறவோ மறுக்கவோ இல்லை, ஆனாலும் ஈரானிய ஆன்மிகத் தலைவர் அலி கொமைனி இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என கூறியுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...