2024 ஜனாதிபதி தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்  தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 18 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு இன்னும் 44 நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50000 ரூபாவும்,சுயாதீன வேட்பாளர் 75,000 ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து 11 வேட்பாளர்களும் சுயாதீனமாகப் போட்டியிடவுள்ள 7 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே தேர்தலுக்கான வேட்பு மனுக்கோரல் எதிர்வரும் 15 ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...