எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
நேற்று மாலை வரையில் ஆறு பேர் ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.