2024 – ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாதம், திட்டமிட்டபடி செப்டம்பர் 7 ஆம் திகதி நடைபெறும் என்று, ‘மார்ச் 12 இயக்கம்’ தெரிவித்துள்ளது.
ஏனைய வேட்பாளர்கள் காட்டும் ஆர்வத்தைக் கருத்திற் கொண்டு, இந்த விவாதத்தை பல கட்டங்களாகச் செயற்படுத்த ‘மார்ச் 12 இயக்கம்’ முடிவு செய்துள்ளது.
இந்த விவாதத்திற்காக, 39 வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும், ஆகஸ்ட் 24 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர், மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் ஒப்புதலை அனுப்புமாறும் சகல வேட்பாளர்களுக்கும் ‘மார்ச் 12 இயக்கம்’ வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை, பின்வரும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், ‘மார்ச் 12 இயக்கம்’ மேலும் தெரிவித்துள்ளது.
மின்னஞ்சல் முகவரி –
march12movement@gmail.com
இணைப்பாளர் – சுதாரக்க அத்தநாயக்க – 94724824460
(ஐ. ஏ. காதிர்கான் )