2024 ஜனாதிபதி தேர்தல்;நாளாந்தம் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Date:

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பதிவான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (30) வரை 1,482 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவற்றில் வன்முறைச் சம்பவங்கள் குறித்து 07 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டத்தினை மீறியமை தொடர்பில் 1419 முறைப்பாடுகளும், 56 வேறு முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

குறித்த முறைப்பாடுகளில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 612 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 870 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...