கொழும்பு, இலங்கை, 2024 ஓகஸ்ட் 01: இலங்கையில் அனைவராலும் விரும்பப்படும் உடனடி நூடுல்ஸ் வர்த்தகநாமமும், நாட்டிலுள்ள இளைஞர்களின் துடிப்பான ஆற்றலைப் பிரதிபலிக்கும் வகையிலான Hot N’ Spicy சுவைக்காக பிரபலமான Prima KottuMee, நாட்டின் பிரபலம் மிக்க பாடசாலை ரக்பி அணிகளுடன் உத்தியோகபூர்வமாக இணைவதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
கொழும்பு றோயல் கல்லூரி, புனித தோமஸ் கல்லூரி, புனித பீட்டர் கல்லூரி, திரித்துவ கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி, இசிபதான கல்லூரி, புனித அந்தோனியார் கல்லூரி ஆகியவற்றின் ரக்பி இரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், மிகவும் எதிர்பார்ப்புக்குரிய 2024 பாடசாலை ரக்பி தொடர் முழுவதும், விளையாட்டின் மீது தாம் கொண்டுள்ள ஆதரவை Prima KottuMee வெளிப்படுத்தவுள்ளது.
இந்த அணிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், இலங்கை இளைஞர்கள் கொண்டுள்ள ஆர்வத்துடனும் ஆற்றலுடனும் தன்னை இணைத்துக் கொண்டு, உணர்ச்சிபூர்வமான பாடசாலை ரக்பி கலாசாரத்தின் ஒரு அங்கமாக விளங்குவதில் Prima KottuMee பெருமை கொள்கிறது.
உற்சாகமளிக்கும் போட்டிகள், மெய்சிலிர்க்கும் தடுப்பாட்டங்கள், புள்ளிகளைப் பெறும் மறக்க முடியாத முயற்சிகளைக் காண நீங்களும் தயாராகுங்கள். இலங்கை பாடசாலை ரக்பி மீதான ஆர்வத்தைத் தூண்டும் Prima KottuMee உடன் இணையுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்க
https://youtu.be/hDwomU3O8X8?si=UPBjnS5jcJ4wh1DF