35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்கு பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவூதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன் படி, ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு இந்த வாய்ப்பு குறித்த நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முகமாக நாட்டின் சுற்றுலாத்தளங்களை மேம்படுத்தும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது.