அரபுலகத்திற்கு வெளியே தொடர்ச்சியாக 9ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட அரபு மொழி நூல்களுக்கான கண்காட்சி இம்முறையும் துருக்கியின் பிரதான நகரமான இஸ்தான்புல் நகரில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை மிக சிறப்பாக நடைபெற்றது.
உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அரபு நூல் பிரியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.
சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களும், புத்தகப் பிரியர்களும் கலந்துகொண்டதோடு இந்த கண்காட்சியை முன்னிட்டு பல்வேறு கருத்தரங்குகளும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.