இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்குவதற்காக Starlink தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (12) முதல் அமுலாகும் வகையில் இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) அனுமதித் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.