‘System Change’ மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்களை அரசியல் கட்சிகள் உள்வாங்க வேண்டும்: ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய!

Date:

(System Change) அமைப்பு மாற்றத்திற்கான சட்ட சீர்த்திருத்த்தினை முன்னெடுப்பது நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனது பொறுப்பாகும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்ததுடன் தற்போது எம்மால் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் பொது உடமை என்னபதால் அரசியல் கட்சிகளும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அமைப்பு மாற்றத்திற்கான சட்ட சீர்த்திருத்த தேசிய மாநாட்டின் ஊடக கலந்துரையாடல் இன்று கொழும்பு துறைமுக லைட் ஹவூஸ் ஹோட்டலில் இடம் பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மேலும் கூறுகையில்,

முரண்பாடுகளுடன் நீண்ட பயணத்தை செய்யும் போது மீண்டும் நாட்டில் ஒரு அச்ச சூழல் ஏற்படலாம் என்கின்ற நிலை ஏற்படும் என அஞ்சுகின்றோம்.எனவே தான் அரசியல் அமைப்புக்குள் கொண்டு வரவேண்டிய விடயங்கள் தொடர்பில் வரைபு ஒன்றினை பல் துறையளார்கள் ஒன்றிணைந்து தயாரித்துள்ளோம்.

இதனை சகலரும் கவனத்தில் கொள்வத பொருத்தமாகும்,117 ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.ஜூலை மாதம் 30 ஆம் திகதி இதனை உத்தியோகபூர்வமாக வெளியிட்டோம்,இதற்கு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம் என்றும் அவர் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

கடந்த தேசிய மாநாட்டில் பரிந்துரைக்கப்பட்ட அத்தியவசிய சட்ட சீர்த்திருத்தப்பரிந்துரைகளை பொதுபேச்சுக்கு வழி நடத்தல்,சொற்பொழிவுகளை தொடர்ந்து முன்னெடுத்தல், விவாதங்களின் பேசப்பட்ட விடயங்களை கொள்கைவரைபில் சேர்க்க கவனம் செலுத்தல்,அரசியல் கட்சிகளின்கொள்ளை விளக்கங்களில் கவனம்செலுத்தப்பட வேண்டிய அரசியல் சீர்த்தருத்தம் தொடர்பில் ஊடகங்கள் மூலம் அவர்களை சென்றடையும் வகையில் இந்த ஊடக மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

செய்தியாளர்மாநாட்டின் முக்கிய நோக்மெனில்,முக்கிய சட்டத்துறை சீர்த்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் கொள்ளை வகுப்பாளர்களின் கவனத்தை இலக்காக கொள்ளுதல், பொதுமக்களிடையே நீதித்துறை சீர்த்திருத்தங்கள் பற்றிய பேச்சுக்கைளை ஊக்குவித்தல், சட்டத்துறையில் நியாயமான மற்றும் மறுசீரமைப்பு நடைமுறைகள் தொடர்பான குறிப்பிட்ட சீர்த்திருத்தங்களை முன்னிலைப்படுத்தல், நீதி, சம பங்கு மற்றும் நிர்வாகத்தின் மீதான சட்ட சீர்த்திருத்தங்களை கண்டறிந்து வாதாடுதல் என்பன இதில் முக்கிய அம்சங்களாக குறிப்படப்பட்டன.

அமைப்பு மாற்றத்திற்கான சட்ட சீர்த்திருதத்திற்கான வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் சிவில் அமைப்பு குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஊடக கலந்துரையாடலில் பேராதனை பல்லைக்கழக பேராசிரியர் தினேஷ் குணதிலக, ஸ்ரீயவர்தனபுர பல்கைலைக்கழக பேராசிரியர் காமினிரத்னஸ்ரீ ஆகியோர் மேற்படி அமைப்பு மாற்றம் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர்.

மேற்படி அமைப்பு மாற்றத்தின் ஆலோசனைகளை உள்வாங்கி செயற்படுகின்ற போதுபல்வேறு அரசியல், சமூக, பொருளாதாரபிரச்சினைகள் என்பன தீர்க்கப்படும் என்பதை இவர்கள் இஙகு சுட்டிக்காட்டியமையும் நோக்கத்தக்கது

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...