அரசியல் மேடையில் ஏறியதன் எதிரொலி: தேசிய சூரா சபை தலைவர் இராஜினாமா

Date:

கொழும்பில் நடைபெற்ற அரசியல் கட்சியொன்றின் பொது மக்கள் சந்திப்பின் போது மேடை ஏறியமை தொடர்பில் எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து தேசிய சூரா சபையின் தலைவர் சட்டத்தரணி T.K . அஸூர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

செயற்பாட்டு அரசியலில் ஈடுபடும் நோக்கில் தான் இப்பதவியை இராஜினாமா செய்வதாக தனது இராஜினாமாக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளது.

தேசிய ஷூரா சபையின் சிரேஷ்ட பிரதித் தலைவர் அஷ்-ஷேய்க் எஸ்.எச்.எம் பளீல் (நளீமி) பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டு கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

தேசிய சூரா சபையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் இதனை அறிவித்துள்ளார்.

தேசிய ஷூரா கவுன்சில் என்பது பல முஸ்லிம் அமைப்புக்களையும் தனி நபர்களையும் உள்ளடக்கிய ஒரு ஆலோசனை அமைப்பாகும், இது இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களை செயலூக்கத்துடன் எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகிறது.

தேசிய ஷூரா கவுன்சில் (NSC) எடுக்கும் முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் அதன் உறுப்பினர்களுடனும் ஏனைய தொடர்புடைய பங்குதாரர்களுடனும் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் எடுக்கப்படுகின்றன.

தேசிய சூரா சபை எந்த வித நேரடி அரசியலிலும் பங்கேற்பதில்லை என்பதன் அடிப்படையிலேயே சட்டத்தரணி அஸூரின் இந்த இராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...