அஷ்ஷெய்க் முனீர் முழபரின் நிதிப் பங்களிப்பில் மினுவாங்கொடை அல் அமானுக்கு அறிவியல் ஆய்வகம்

Date:

மினுவாங்கொடை கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று மிக முக்கியமான நிகழ்வாக, நவீன அறிவியல் ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம அதிதியாக, சமூக செயற்பாட்டாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான மௌலவி முனீர் முழபர் கலந்து சிறப்பித்தார்.

இவர் தமது உரையில், “இந்த அறிவியல் ஆய்வகம், மாணவர்களின் அறிவியல் திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை வழங்கும் ஒரு முக்கியமிக்க சாதனையாக இருக்கும். இத்தகைய வசதிகள் மாணவர்களின் படிப்புத் திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்,” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த அறிவியல் ஆய்வகத்தை உருவாக்குவதற்கான நிதி உதவியையும் அவர் வழங்கியிருந்தமை சிறப்பம்சமாகும்.

நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக, மினுவாங்கொடை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி பணிப்பாளர் வாஜிர ரணராஜ பெரேரா, உதவி கல்வி பணிப்பாளர் ஏ.ஏ.எம். ரிஸ்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடசாலை அதிபர், உப அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பிற நிர்வாக குழுவினரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDS), பழைய மாணவர்கள் சங்கம் (OBA & OGA) மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆய்வகம், பாடசாலை மாணவர்களுக்கு அறிவியல் துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமையும் என அனைவராலும் பாராட்டப்பட்டது.

 – ஏ.சி பௌசுல் அலிம்

Popular

More like this
Related

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...