ஆளும் கட்சிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை:எதிர்க்கட்சிகள் தீர்மானம்

Date:

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற பெரும்பான்மையை சவாலுக்குட்படுத்தும் வகையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவது தொடர்பில், எதிர்க்கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் (06) செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன.

இதனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், பாராளுமன்றத்தில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையை சவாலுக்குட்படுத்தும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர, எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

“ஆளும் கட்சிக்கு 113 என்ற பெரும்பான்மை இல்லை” என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

ஆளும் கூட்டணிக் கட்சிகளின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

ஆனால், “ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை” என்று, பொதுஜன பெரமுன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம், குறித்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன தனித்து வேட்பாளரை நிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதுடன், அந்த வேட்பாளரை (07) புதன்கிழமை அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கோ அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது என்பது, எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பாகும்.

இந்த உண்மை நிலைமையை, நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவும், பாராளுமன்றத்துக்குள் அரசாங்கத்திற்கு நெருக்கடியான நிலைமையைத் தோற்றுவிக்கும் வகையிலேயே, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இறுதியாக இடம்பெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தின் பின்னர், பொதுஜன பெரமுனவின் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பின் பிரகாரம், “ஆளும் கட்சிக்கு 113 என்ற பெரும்பான்மை இல்லை” என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

( ஐ.ஏ. காதிர் கான்)

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...