ஈரானுக்கான அனைத்து விமானங்களையும் இடைநிறுத்திய துருக்கி!

Date:

துருக்கிய ஏர்லைன்ஸ், (Turkish Airlines) ஈரானுக்கான அனைத்து விமானங்களையும் இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பானது, நேற்றையதினம் (02) வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஈரானில் பல இடங்களுக்கு திட்டமிடப்பட்ட விமான சேவைகள் இன்று (03) சனிக்கிழமை வழமைக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கும்  ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல் ஒன்று நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...