கொழும்பிலிருந்து குப்பைகளை கொண்டுசென்று அருவைக்காட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Date:

கொழும்பிலிருந்து குப்பைகளை புகையிரதம் மூலம் கொண்டுசென்று அருவைக்காட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இளைஞர்கள் இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பிலுள்ள குப்பைக் கூளங்கள் புகையிரதம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு புத்தளம் அருவைக்காட்டில் கொட்டுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் புத்தளம் மணல் குன்று புகையிரத பாதைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை  குப்பைகளை அருவைக்காட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2018 செப்டெம்பர் 28ஆம் திகதி புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக புத்தளம் மக்கள் 100 நாள் சத்தியாக்கிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இரவு வேளைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் டிப்பர் வாகனத்தின் மூலம் குப்பைகள் அருவைக்காட்டுக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர்  குப்பைகளை கொண்டுசெல்லும் இந்த செயற்பாடு நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர், மீண்டும் இன்று கொழும்பிலிருந்து குப்பைகளை புகையிரதம் மூலம் ஏற்றிச் சென்று அருவைக்காட்டில் கொட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க நடவடிக்கை!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்...

‘காஷ்மீர் கறுப்பு தினம்’: கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாட்டில் (27) ‘காஷ்மீர் கறுப்பு தினத்தை’ குறிக்கும்...

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் 30ஆம் திகதி ஆரம்பம்

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (30) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள்...

4 ஆண்டுகளுக்குப் பிறகு குவைத் ஏர்வேஸ் கொழும்புக்கு!

குவைத் ஏர்வேஸ் 4 வருட இடைவெளிக்குப் பிறகு இன்று (27) முதல்...