எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைமையிலான தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரதித் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரன் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.