சஜித்தின் புதிய கூட்டணி: 8 கட்சிகள் இணைந்தன: எம்.பிகள் பலரும் ஆதரவு

Date:

எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 08 கட்சிகள் இணைந்துள்ளன.

இந்தக் கட்சிகளுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்றது.

பிளவுபடாத ஐக்கிய நாட்டுக்குள் சகலருக்கும் சமவுரிமை கிடைக்க வேண்டுமென்ற கோட்பாட்டின் பிரகாரம் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திர மக்கள் சபை, அர்ஜுன ரணதுங்கவின் மக்களின் குரல் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி ஜயசேகரவின் தரப்பு உள்ளிட்ட 08 கட்சிகள் கூட்டணியின் பிரதான பங்காளிகளாக உள்ளன.

அதேபோன்று நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் எம்.பிகளும், பல்வேறு சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துள்ளன.

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்ரஸ் இதற்கு முந்தைய தேர்தல்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்தே செயற்பட்டது.

எனினும் இம்முறை அக்கட்சி அவ்வாறானதொரு தீர்மானத்தை அறிவிக்கவில்லை. அடுத்த வாரமே தாம் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...