தன் மகளின் திருமணத்தின் மூலம் மனிதாபிமானத்தையும் சகவாழ்வையும் வெளிப்படுத்தும் வகையில் திருமணம் செய்து காட்டிய தந்தை!

Date:

கேரள மாநிலத்தின் தலாயி என்ற பகுதியை சேர்ந்த சலீம் மற்றும் அவரது மனைவி ரூபினா தம்பதிகளான இருவரும் தனது மகளான ரமீசாவின் திருமணத்தின் போது மேலும் ஐந்து பெண்களின் திருமண செலவுகளை ஏற்று அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதில் ஐவரில் மூன்று பேருக்கு இஸ்லாமிய முறைப்படியும் 2 பெண்களுக்கு இந்து முறைப்படியும் திருமணத்தை முடித்து வைத்துள்ளனர்.

ரமீசாவின் தந்தையான சலீம் ஆரம்ப கட்டத்தில் இருந்தே தனது மகளுக்கு வரதட்சனை வாங்காத ஒரு நபரையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் அவர் உறுதியாக இருந்துள்ளார்.

மேலும் தனது மகளின் திருமணத்தை எளிமையான முறையில் நிகழ்த்தி பொருளாதார தரத்தில் கீழ் உள்ள பெண்களுக்கு திருமணத்தை செய்து வைக்க வேண்டும் எனவும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இதன் படி கேரள மாநிலம் வயநாடு,எடச்சேரி மற்றும் அதனுடன் கூடலூர் மலப்புரம் மேப்பயூர் பகுதிகளை சேர்ந்த ஐந்து குடும்ப பெண்களை தேர்வு செய்து அவர்களின் திருமண செலவுகளை ஏற்றுக்கொண்டனர். தனது மகளின் திருமணத்தன்று 5 பெண்களின் திருமணத்தையும் நடத்தியுள்ளனர்.

முனவர் ஷாப் தலைமையில் எளிமையான முறையில் திருமண விழா நடைபெற்றதாக தெரிவிக்கின்றனர்.

திருமணத்தின் போது 5 மணப்பெண்களும் ஒரே விதமான சேலைகளை அணிந்து அதன்பின் ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் தலா 10 சவரன் தங்கத்தை வழங்கியுள்ளார்.

மதங்களை கடந்து நடைபெற்ற  திருமண நிகழ்வானது கேரள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...