3 தூதுவர்கள் மற்றும் 2 உயர்ஸ்தானிகர்கள் புதிதாக நியமனம்!

Date:

இலங்கைக்கு புதிதாக மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் குறித்த ஐவரும் நேற்று (21) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.

1. டயானா மெக்கிவிசீன் (Diana Mickeviciene) – தூதுவர் – லிதுவேனியா குடியரசு
2. டிரின் தி டாம் (Trinh Thi Tam) – தூதுவர் – வியட்நாம் சோசலிசக் குடியரசு
3. மாலர் தன் டைக் (Marlar Than Htaik) – தூதுவர் – மியான்மார்
4. பெர்சி பெட்சன் சந்தா (Percy Patson Chanda) – உயர்ஸ்தானிகர் – சிம்பாப்வே
5. அண்டலிப் எலியாஸ் (Andalib Elias)– உயர்ஸ்தானிகர் – பங்களாதேஷ்

இந்நிலையில் நற்சான்றிதழ்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...