‘நாம் செத்து மடிவதை உலகம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என காசா வயோதிபர் ஒருவர் கூறுகின்றார்.
போர்க்களத்தில் அலைந்து திரியும் இந்த வயோதிபரின் நிலையை கண்ட ஒரு ஊடகவியலாளர் இவரின் இந்த நிலை பற்றி கேட்ட பொழுதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
‘இஸ்ரேலிய அராஜகம் இந்த வயோதிபரைப் போன்ற பல்லாயிரம் காஸா வயோதிபர்களை இவ்வாறு அலைந்து துன்பப்பட வைத்துள்ளது.
ஒக்டோபர் 7ம் திகதி முதல் கடந்த 11 மாதங்களாக தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 40,000ஐ தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஸா பகுதி மொத்தமாக சேதமடைந்துள்ளதுடன் சுமார் 2 மில்லியன் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.