பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்!

Date:

இலங்கையிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான  பலஸ்தீனத் தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச் செய்த், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை புதன்கிழமை (07) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் பலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து சபாநாயகர் கேட்டறிந்துகொண்டார்.

பலஸ்தீனம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் மனிதநேய பிரச்சினைகள் குறித்து பலஸ்தீனத் தூதுவர் சபாநாயகருக்கு விளக்கிக் கூறினார்.

இக்கட்டான சூழ்நிலைகளில் அனைத்து இலங்கையர்களும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக நின்றமை குறித்து தூதுவர் சபாநாயகருக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கையில் தான் பணியாற்றிய காலத்தில் வழங்கிய அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி வெற்றி பெறுவதன் மூலம் தனியார் முதலீடுகளை ஈர்க்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதில் இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் கலாநிதி சுஹைர் வழங்கிய பங்களிப்புக்கு சபாநாயகர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...