சவூதி அரேபியா ஊடகங்கள் தெரிவிக்கின்ற செய்திகளின் பிரகாரம் 634 மீற்றர் உயரத்தைக் கொண்ட மக்காவில் இருக்கின்ற ஹிரா குகைக்கு கேபிள் கார் மூலம் செல்வதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஹிரா குகைக்கு செல்வதற்கான கேபிள் கார் திட்டம் இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது. 2025ஆம் ஆண்டில’ அது பூர்த்தியாகும் என்று நம்புகின்றோம்.
அதேநேரத்தில் அதற்கு அண்மைப் பகுதியில் ஓர் நூதனசாலையும் ஜபல் உமர் என்ற மலையடிவாரத்தில் பக்கத்தில் அமைக்கப்படவிருக்கிறதாகவும் அதுவும் அதே வருடத்தில் திறந்துவைக்கப்படவுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.
ஹிரா குகை என்பது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹாவின் இறைத்தூதராக பிரகடனம் செய்யப்பட்டதற்கு பின்னால் அவர்களுக்கு முதன் முதலாக வஹி என்று சொல்கின்ற குர்ஆனுடைய செய்திகள் இறக்கப்பட்ட இடமாக இந்த ஹிரா குகை கருதப்படுகிறது.
இதனால் புனித பயணம் மேற்கொள்கின்ற இலட்சக்கணக்கான யாத்ரீகர்கள் இந்த ஹிரா குகையை தரிசிப்பதற்காக செல்வது வழக்கமாக இருக்கிறது.
அந்தவகையிலே இந்த ஹிரா குகைக்கு ஏறிச்செல்கின்ற மக்களுடைய சிரமத்தை குறைக்கின்ற வகையில் இந்த கேபிள் கார் முறை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுக ஓர் மகிழ்ச்சியான செய்தியாகும்.