மட்டு. மறை மாவட்டத்திற்கு புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகர் நியமனம்

Date:

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக அருட்கலாநிதி என்டன் ரஞ்சித் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸினால் நேற்று (19) இப்பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அவர், தேசிய கத்தோலிக்க இளைஞர் சம்மேளனத்தின் பொறுப்பு ஆயராகவும், கொழும்பு மறை மாவட்டத்தின் துணை ஆயராகவும் பணியாற்றி வருகின்றார்.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா சுகவீனம் காரணமாக குறித்த பதவிக்கு ஆயர் என்டன் ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது ஆயர் ஜோசப் பொன்னையா உடல்நலக் காரணங்களுக்காக இராஜினாமா செய்தார்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...