இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் லெபனானில் உள்ள தமது பிரஜைகளை உடன் வெளியேறுமாறு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலை அடுத்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவுஸ்திரேலியர்கள் லெபனானில் இருந்து விரைவில் வெளியேற வேண்டும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேபோன்று அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவும் இதே கோரிக்கையை தங்கள் நாட்டு மக்களிடம் விடுத்துள்ளன. இதேவேளை சுமார் 15,000 அவுஸ்திரேலியர்கள் லெபனானில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.