மீண்டும் பற்றி எரியும் பங்களாதேஷ்: நாடு முழுக்க வெடித்த வன்முறை!

Date:

பங்களாதேஷில் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக ஆளும் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மூண்டுள்ள மோதலில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.பலர் படுகாயமடைந்துள்ளனர்.

வன்முறையைக் கட்டுப்படுத்த வங்கதேச பொலிஸார்பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இருப்பினும், அதை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை

பங்களாதேஷில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவர் போராட்டம் வெடித்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனால் போராட்டம் சற்றே ஓய்ந்து இருந்த நிலையில், இப்போது வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

இன்று காலை வெடித்த இந்த வன்முறையில் சுமார் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். அ

ங்குப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இதுவே உயிரிழப்புகளுக்குக் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி அங்கே பல ஆயிரம் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், இந்த போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நீதி வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க வங்கதேச அரசு கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் வருகின்றனர். இருப்பினும், அதில் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

போராட்டங்கள் கையைவிட்டுப் போய் இருக்கும் சூழலில், நிலைமையை சமாளிக்க அங்கே மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், அதைத் தாண்டி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அங்கே இந்த மாணவர் போராட்டத்தை ஒடுக்க போலீசார் இதுபோல மொத்தமாக ஊரடங்கை அறிவிப்பது இதுவே முதல்முறையாகும்.

பங்களாதேஷ தலைநகர் டாக்காவின் பல இடங்களைப் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அங்குப் பல முக்கிய இடங்களில் சிறுசிறு மோதல்களும் நடந்துள்ளன.

மேலும், போராட்டக்காரர்கள் முக்கிய நெடுஞ்சாலைகளை முடக்கியுள்ளனர்.. இந்த மாணவர் போராட்டத்திற்கு பங்களாதேஷ எதிர்க்கட்சியின் ஆதரவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மேலும், அங்கே போராட்டக்காரர்கள் ஒத்துழையாமை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.. அங்கு பிரதமர் பதவி விலகும் வரை மக்கள் யாரும் வேலைக்குச் செல்லக் கூடாது என்றும் வரி செலுத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். அதையும் மீறி இன்று திறக்கப்பட்ட அலுவலகங்கள் மற்றும் கடைகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல்களை நடத்தினர்.

மேலும், அங்கு சில இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடந்ததாக கூறப்படுகிறது.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...