ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இது ஒரு மனிதாபிமானமற்ற தாக்குதல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதுடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதிக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் மறைமுக விளைவை எதிர்காலத்தில் எமது நாடும் அனுபவிக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.