இலங்கை தேசிய இளையோர் MUAY THAI அணி நாளை தாய்லாந்து பயணம்

Date:

எதிர்வரும் 12ஆம் திகதி  தாய்லாந்தில் ஆரம்பமாக உள்ள World MUAY THAI junior championship போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இலங்கை தேசிய இளையோர் MUAY THAI அணி தாய்லாந்து பயணமாகியது.

ஐரோப்பிய அமெரிக்க பிராந்தியம் உட்பட உலகளாவிய ரீதியில் 120 நாடுகளின் வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் இலங்கையில் இருந்து 30 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏற்கனவே நடைபெற்ற தேசியமட்ட போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வெற்றி கொண்ட வீரர்களை உள்ளடக்கி தகுதிகாண் படிமுறைகளை நிறைவு செய்த ஸுமர் தில்ஷாத், ஃபதா நூர் முகமது, அஷ்மல் அஷ்ரப் அலி (Zumar Dilshad, Fathah Noor Mohamad, Ashmal Ashraff Ali) மூன்று சிறார்களும் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இவர்களுடன் இந்தப் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் உத்தியோகபூர்வ தேசிய நடுவர் மற்றும் பிரதான பயிற்றுவிப்பாளர் Muaad Ifthikar ஆகியோரின்  வெற்றிக்கு ‘நியூஸ்நவ்’ சார்பாக வாழ்த்துகிறோம்.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...