உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான அறிவித்தல்

Date:

கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை (GCE A/L) விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பங்களை 04 ஆம் திகதி முதல்  23 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தின் ஊடாக மதிப்பீட்டாளர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெட்டுப்புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கைகள் இறுதிகட்ட பணியில் உள்ளதாக அதன் உபதலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...