ஒரே நேரத்தில் வெடித்த ஆயிரக்கணக்கான பேஜர்கள்:லெபனானில் பயங்கரம்;இஸ்ரேலின் பெரிய சதி?

Date:

லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரின் 5,000 பேஜர்கள் நேற்று ஒரே நேரத்தில் திடீரென்று வெடித்து சிதறின.

இதில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில், 2750 பேர் காயமடைந்துள்ளனர். 100 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் தான் ஒரே நேரத்தில் 5,000 பேஜர்கள் வெடித்த இஸ்ரேலின் உளவுத்துறையான ‛மொசாட்’ செய்தி சதிச்செயல் தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது பேஜர்களில் ‛மொசாட்’ உளவு அமைப்பு வெடிப்பொருளை வைத்து இந்த வெடிப்பை நிகழ்த்தி உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒரே நேரத்தில் லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வரும் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்து சிதறின. லெபனான் மட்டுமல்லாது அந்நாட்டுக்கு வெளியே சிரியாவில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஆயுத கும்பல் வைத்திருந்த பேஜர்களும் வெடித்து சிதறியுள்ளன. மொத்தமாக 5 ஆயிரம் பேஜர்கள் வெடித்து சிதறியுள்ளன.

இதில் 9 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 2,750 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 100 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த பேஜர் வெடிப்புக்கு ஈரான் நாட்டுக்கான லெபனான் தூதர் முஜிதாபா அமானி என்பவர் காயமடைந்ததாகவும், லெபனான் நாடாளுமன்றத்தின் ஹிஸ்புல்லா பிரதிநிதியான அலி அமாவின் மகன் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதோடு ஒரே நேரத்தில் இந்த பேஜர் தாக்குதலுக்கு அதில் இருந்து லித்தியம் அயன் பேட்டரிகள் தான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

அதேவேளையில் பேஜர் வெடிப்பின் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என்று லெபனான் சந்தேகம் எழுப்பிய நிலையில் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஒரே நேரத்தில் லெபனானில் எப்படி 5000 பேஜர்கள் வெடித்தது என்பது பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தை இஸ்ரேலில் இருந்தே அந்த நாட்டின் உளவு அமைப்பான ‛மொசாட்’ பெரிய பிளான் செய்து அதனை பிசிறு தட்டாமல் செய்து முடித்துள்ளதாக பகீர் தகவல் கிடைத்துள்ளது.

அதாவது இஸ்ரேலுக்கு, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் தகவல் பரிமாற்றம் சாதனங்கள் பற்றிய விபரம் நன்கு தெரியும். இஸ்ரேலின் கண்காணிப்பை தவிர்க்க ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிகமாக பேஜர்கள் தான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் போன் பேச முடியாமல் இருந்தாலும் கூட ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு மெசேஜ் அனுப்பி வைக்க முடியும்.

செல்போன் பயன்படுத்தினால் இஸ்ரேல் உளவு பார்க்கலாம் என்பதால் ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர் பயன்படுத்தி ருகின்றனர். இப்படி பேஜர்கள் மூலம் தான் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் லெபனானில் இருந்து இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான திட்டங்களை வகுத்து மெசேஜ் பாஸ் செய்து வருகின்றனர்.

இதனால் பேஜர் மூலம் அவர்களை தீர்த்து கட்ட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்காக பெரிய பிளானை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தீட்டி அதனை செயல்படுத்தி உள்ளது. அதாவது ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள் தைவான் நாட்டின் தைபே நகரில் செயல்பட்டு வரும் கோல்ட் அப்பல்லோ எனும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இங்கிருந்து தான் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு பேஜர்கள் செல்கின்றனர். சமீபத்தில் அதாவது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தைவானிடம் இருந்து 5,000 பேஜர்களை ஹஸ்புல்லா அமைப்பினர் வாங்கி உள்ளனர். இந்த பேஜர்கள் தான் நேற்று திடீரென்று வெடித்து சிதறியுள்ளன. தற்போது வெடித்த பேஜரின் மாடல் என்பது AP924 வகையாகும் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அந்த பேஜரின் போர்ட்டுகளில் இருந்த 20 கிராமுக்கு குறைவான வெடிப்பொருட்கள் தான் என்று லெபனானின் பாதுகாப்பு துறையை சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛தைவானில் இருந்து வாங்கப்பட்ட பேஜரில் இஸ்ரேலின் மொசாட் வெடிப்பொருட்களை வைத்துள்ளது.

பேட்டரியின் மற்றும் போர்ட் மீது வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பொருளை ஸ்கேனர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் கண்டறிவது கடினம். ” என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் அரசு, இஸ்ரேல் ராணுவம், இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை சார்பில் இருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை. இருப்பினும் இஸ்ரேல் இப்படி செய்து இருக்குமா? என்று பலரும் கேள்வி கேட்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் இஸ்ரேல் இதுபோன்ற சம்பவத்தை இதற்கு முன்பு ஒருமுறை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...