கத்தாரிலிருந்து உம்ராவுக்கு சென்ற புத்தளம் குடும்பம் விபத்து: கர்ப்பிணி தாயொருவர் பலி

Date:

புத்தளம் பகுதியைச் சேர்ந்த முஹம்மது முபாரிஸ் மற்றும் அவரது குடும்பம், கத்தாரிலிருந்து உம்ராவிற்கு சென்று திரும்பும் வழியில் இடம்பெற்ற, கார் விபத்தில்  முபாரிஸின் கர்ப்பிணி மனைவியான பாத்திமா ஷாபாரிஜ் (33) உயிரிழந்துள்ளார்.

சவூதி- கத்தார் எல்லையான சல்வா பகுதியில் கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் கர்ப்பிணி தாயும் வயிற்றில் இருந்த குழந்தையும் மரணமடைந்தனர். ஏனையவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனம் ஓட்டும் போது சாரதி தூங்கியதாலே இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த கர்ப்பிணி தாயின் உடல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு இன்று (30) அடக்கம் செய்யப்படும்.

 

 

Popular

More like this
Related

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...

மத்தியக் கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள்...

கத்தாரிலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

தற்போதைய பிராந்திய பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு, கத்தாரில் வசிக்கும் இலங்கை பிரஜைகள்...

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல்

ஜெனீவாவில் நடைபெற்ற ஈரான் - அமெரிக்கா இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...