காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்: சவூதி வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம்

Date:

காசா பகுதியிலுள்ள பலஸ்தீனிய அகதிகள் அடைக்கலம் புகுந்திருந்த பாடசாலை ஒன்றைக் குறிவைத்து தாக்கிய இஸ்ரேலிய படைகளின் இழிச் செயலை சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சு கடுமையாக கண்டிக்கிறது.

இதனால் அப்பாடசாலையில் இருந்த பலர் உட்பட ஐநா ஒனர்வா ஊழியர்கள் பலரும் பலியானனர்.

சவூதி அரேபியா, இவ்வன்முறையை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதுடன், அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இத்தகைய மனிதாபிமான மீறல்களை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் கோருகிறது.

மேலும், இஸ்ரேல் செய்யும் இவ்வத்து மீறல்களை கேள்விக்குட்படுத்த சர்வதேச சமூகம் முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது.

காசாவில் உள்ள மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா சபையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இயங்கிவந்த பாடசாலை மீதே இவ்வாறு தாக்குதல் நாடத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...

‘இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH இல்.

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் வெளியிடுகின்ற ''இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில்...

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...