கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மிகப்பெரிய கப்பல்

Date:

மிகப்பெரிய கப்பலான “EVER ARM” கொழும்பு  துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதாக  இலங்கை துறைமுக அதிகார சபை  தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலானது, நேற்று (05) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

400 மீற்றர் நீளம், 60 மீற்றர் அகலம் மற்றும் 17.027 மீற்றர் மூழ்கும் தன்மை (கோடை காலத்தில் சரக்குகளை முழுமையாக ஏற்றும் போது கப்பலின் மேலோட்டம் மூழ்கக்கூடிய அதிகபட்ச ஆழம் என்பவற்றை “EVER ARM”  கப்பல் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், செயல்பாட்டு திறன் (கப்பலின் இயங்கும் திறன்) மற்றும் சரக்கு திறன் (கப்பல் எடுத்துச் செல்லக்கூடிய சரக்கின் அளவு) என்பவற்றை மேம்படுத்தும் மேம்பட்ட உந்துவிசை அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, சுமார் 24,000 TEU ( 20 அடி கொள்கலன் ) சுமக்கக் கூடிய இக் கப்பலை ஆசியாவின்  ஒரு சில துறைமுகங்களால் மட்டுமே கையாள முடியும் என கூறப்படுகின்றது. அந்த வரிசையில் கொழும்பு துறைமுகமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...