ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக முஸ்லிம் லீக் வழங்கியுள்ள வழிகாட்டல்கள்!

Date:

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எதிர்கால ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டல்களை அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் வழங்கியுள்ளது.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் ஒப்பமிட்டு வழங்கியுள்ள இந்த வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

2015 ஆம் ஆண்டு ஜனாபதி தோ்தலில் இந்த நாட்டில் இனவாதத்தை தோற்கடிக்க ஒன்றிணைந்து வாக்களித்த முஸ்லிம் சமூகம், 2019 இல் மீண்டும் அரங்கேறிய இனவாதத்துக்கு எதிராக ஒற்றுமையாக ஒன்றிணைந்து தூரநோக்குடன் செயற்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெற்றியை உடனடியான உணர்ந்த நாம், 2019 ஒற்றுமையின் வெற்றியை ஓரிரு வருடங்களின் பின்னரே உணர்ந்தோம்.

சமூகம் ஒற்றுமைப்பட்டால் அல்லாஹ்வின் உதவிகள் நியாயத்தின் பக்கம் நிச்சயம் கிடைக்கும்.

மும்முனைப் போட்டியாக மாறியுள்ள இந்த ஜனாதிபதித் தோ்தலில் முஸ்லிம்களின் வாக்கு மிகவும் பெறுமதிமிக்கது. இது தேசத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், வளமிக்க பன்மைத்துவத்துக்கும், குறிப்பாக எமது குடும்ப கட்டமைப்பைப் பாதுகாப்பதற்குமான ஒரு முக்கியமான களமாகும்.

ஆகவே, இந்தத் தோ்தலில் ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்வதில் சாட்சியமளிக்கும் நீங்கள், குறித்த வேட்பாளர் பின்வரும் விடயங்களைச் செய்வதற்கான உரிய தகைமை உடையவரா என்பதை நீங்களே சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்:

1. ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் நடுநிலைமையாக நின்று செயற்பட்ட அதிகாரிகளை அரசியல்மயப்படுத்தாது, குறித்த பின்னணியை உருவாக்கிய, திட்டமிட்டு செயல்படுத்திய, மற்றும் குறித்த தாக்குதலில் நேரடியாக மற்றும் மறைமுகமாக ஈடுபட்ட அனைத்து சூத்திரதாரிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் ஆளுமையுடையவராக இருத்தல் .

2. தனிப்பட்டதொரு இனக்குழுவை அல்லது ஒரு கட்சியை மையப்படுத்திய அரச அமைப்பை முழுமையாகவே புறக்கணித்து தனது அமைச்சரவையிலும், அனைத்து வகையான அரச (ஜனாதிபதியின்) நியமனங்களிலும் சிறிய மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து இன மற்றும் சமயக்குழு சார்ந்த பிரதிநிகளும் உள்வாங்கப்படல் வேண்டும். குறிப்பாக எமது நாட்டை சர்வாதிகார அழிவுப்பாதைக்குள் இட்டுச்செல்லும் தனிக்கட்சி ஆட்சி முறைமையை முழுமையாகவே புறக்கணிப்பவராக இருத்தல்.

3. பாராளுமன்ற சிறப்புரிமைக்குள் மறைந்தும் அதற்கு வெளியேயுமான அனைத்து வகையான வெறுப்புச் பிரசாரங்களும் தடைசெய்யப்படுவதுடன், குறிப்பாக ஒரு சமயம் அல்லது இனக்குழு சார்ந்த ஆடை ஒழுங்கு (நிகாப் மற்றும் ஹிஜாப்) மற்றும் விரும்பிய உணவைத் தெரிவுசெய்யும் உரிமைகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விமர்சனம் செய்யாது அனைத்துச் சமூகங்களினதும் சமய கலாசார உரிமைகளை பேணி மதிப்பளிப்பவராக இருத்தல்.

4. ஒரு சமூகத்தின் அடிப்படையான ‘குடும்பம்’ என்ற கட்டமைப்பை அழிக்கும் ஓரினச்சோ்க்கை, விபச்சாரத்துக்கான அங்கீகாரம், ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பது பெண்ணின் தனிப்பட்ட விருப்பு என்ற கடும்போக்குவாத பெண்ணியல்வாத விசமக் கருத்துக்களை தமது தோ்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்காதவராக இருத்தல்.

5. பலஸ்தீன மக்களின் விடுதலைக்கும் சுயாதீனமானதொரு பலஸ்தீன அரசை நிறுவுவதற்கும் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் நேரடியாகப் பங்கெடுத்து, பாராளுமன்றத்திலும், சர்வதேச மற்றும் தேசிய ஊடகங்களிலும் “இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு” என்று தைரியமாக குரல்கொடுத்து தொடர்ந்தும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதோடு நாட்டின் இறைமையை விட்டுக் கொடுக்காமல் மனிதாபிமான நெருக்கடிகளுக்காக குரல் கொடுக்கும் துணிச்சல் கொண்டவராகவும் இருத்தல்.

டி.பீ. ஜாயா, சோ் ராசிக் பரீட், டாக்டர் எம்.சி.எம். கலீல், எஸ். எல். நைனா மரிக்கார், தேசமான்யா அல்-ஹாஜ் பாகிர் மாகார், ஏ.எம்.ஏ. அஸீஸ், கலாநிதி பதியுதீன் மஹ்மூத், எம்.எச். மொஹமட், எம்.எச்.எம். அஷ்ரப் உள்ளிட்ட சிறந்த அரசியல் தலைமைகளின் வழிகாட்டலில் நெறிப்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகம் இன்றும் பல சிறந்த தேசிய அரசியல் ஆளுமைகளைக் கொண்டுள்ளது.

எனவே அனைத்து இன மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதொரு தேசிய ஜனநாயக அரசாங்கத்தை உறுதிசெய்யும் ஒரு ஜனாதிபதியைத் தொிவுசெய்வது அனைத்து முஸ்லிம்களதும் சமூகக் கடமையாகும்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...