ஜனாதிபதியின் செயலாளராக நந்திக சனத் குமாநாயக்க நியமனம்..!

Date:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் செயலாளராக சனத் நந்திக குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சனத் நந்திக குமாநாயக்க களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார்.

நந்திக சனத் குமாநாயக்க  களனிப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி அதிகார சபையில் கலாநிதி பட்டம் பெற்றவர்.

அவர்  இலங்கை சுங்கத்தின் பிரதிப் பணிப்பாளராகவும் நவீனமயமாக்கல் செயல்முறையின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, தற்போது இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து காலியான அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் லக்ஷ்மன் நிபுண ஆராச்சி தெரிவு செய்யப்படவுள்ளார்.

Popular

More like this
Related

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...