திலித் ஜயவீர மாத்திரம் பங்குபற்றிய ஜனாதிபதி தேர்தல் விவாதம்!

Date:

மார்ச் 12 என்ற இயக்கத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதத்தில் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர மாத்திரம் பங்குபற்றியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமாகிய இந்த விவாதத்தில் 6 வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச நாமல் ராஜபக்ஷ மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோர் மாத்திரம் இதற்காகத் தங்களது விருப்பத்தை வெளியிட்டனர்.

எனினும் இவர்களில் திலித் ஜயவீர மாத்திரம் கலந்துகொண்டிருந்தமை பேசுபொருளாகியுள்ளது.

நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்பார்ப்புடன்  விவாத நிகழ்வை காண ஆவலாக இருந்த நிலையில் ஒரு வேட்பாளர் மாத்திரம் வருகைத்தந்திருந்தமை ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்தது.

எவ்வாறாயினும் இந்த நேரலை நிகழ்வில் பல பகுதிகளில் இருந்தும் மார்ச் 12 அமைப்பைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வை பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி நெறிப்படுத்தியதுடன் விவாதத்தில் சாலிய பீரிஸ் தலைமையில் கேள்விகள் கேட்கப்பட்டன.

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...