நாட்டின் பல பகுதிகளிலும் மீலாத் தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பு.

Date:

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் மீலாத் தின சிறப்பு நிகழ்வுகள் இன்று (16)  இடம்பெறுகின்றன.

அந்தவைகயில் பேருவளை, சீனன்கோட்டை தரீக்கதுல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் ரபிய்யுல் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கு முகமாக 12 தினங்கள் மௌலீத் ஓதும் நிகழ்வு பத்தை ஸாவியா லேனில் வெகுவிமர்சையாக நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்வில் சுப்ஹான மௌலீத் ஓதப்படுவதுடன் தமாம் மஜ்லிஸ் இன்று இரவு வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

அதேநேரம் பறகஹதெனிய, ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலின் வருடாந்த மீலாதுன் நபி தின போட்டி நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா இன்று பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரியபள்ளி வாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஷாதுலியாத் தரீக்காவின் தலைமையகமான கொழும்பு உம்மு ஸாவியாவில் 122ஆவது வருட புனித ‘சமாயி லுத் திர்மிதி பாராயண மஜ்லிஸ்’ தமாம் வைபவம் இன்று (16)  நடைபெறும்.

இதேவேளை பேருவளை முஸ்லிம் வியாபாரிகள் ஒன்றிணைந்து வருடாந்தம் நடாத் தும் மீலாத் விழா மற்றும் மௌலித் மஜ்லிஸ் இன்று பேருவளை நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மேல் மாடியில் நடைபெறும்.

முகத்தமுஷ் ஷாதுலி முர்தாஜ் ஸமீம் பொறுப்பாக இருந்து நடாத்தும் நிகழ்வில் உலமாக்கள், வர்த்தகர்கள். மத்ரஸா மாணவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன உறவை கட்டியெழுப்பும் வகையில் ஏனைய சமூகங்களையும் அழைத்து இவ்விழாவை சிறப்பாக நடாத்த வர்த்தகர்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக முர்தாஜ் ஸமீம் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...