பங்குச் சந்தைகளில் சரிவு: அமெரிக்க செய்தி நிறுவனம் ப்ளூம்பெர்க் எச்சரிக்கை!

Date:

கொழும்பில் டொலர் பத்திரங்கள் மற்றும் பங்குகள் சரிவடைந்துள்ளதாக அமெரிக்க ஊடக நிறுவனமான ப்ளூம்பெர்க், (Bloomberg) செய்தி வெளியிட்டுள்ளது.

2029 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதிர்ச்சியடையும் பத்திரங்கள் 3.1 சதம் (cent) குறைவடையும் என்றும் இது இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவு என்றும் கூறப்படுகிறது.

திங்கட்கிழமையான இன்று டொலரில் 50.2 சதங்கள் நிலவுகிறது. ப்ளூ-சிப் பங்குகளின் S&P Sri Lanka 20 சுட்டெண் ஆரம்ப வர்த்தகத்தில் 2 வீதம் சரிந்தது. ஆனாலும் ரூபாயின் பெறுமதி நிலையாக உள்ளது.

அனுரகுமார சர்வதேச நாணய நிதிதியத்துடன் 03 பில்லியன் டொலர் பிணை முறி தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக முன்னாதாக உறுதியளித்தார்.

இது வாக்காளர்களை கவர்வதற்காக அவரால் வழங்பட்ட உறுதிமொழியென எடுத்துக்கொள்ளலாம்.

தற்போதுள்ள வரிகளை குறைப்பது மற்றும் அரச செலவீனங்களை குறைப்பது போன்ற தோற்றப்பாட்டையும் காண்பிக்கிறது.

இதேவேளை, “அனுரவின் வெற்றி என்பது இலங்கையின் பத்திரங்களுக்கு மிக மோசமான நிலைமையாகும்” என்று டெலிமிரர் அரசியல் பத்தி எழுத்தாளர்களான ஹஸ்னைன் மாலிக் மற்றும் பேட்ரிக் குரான் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை குறிப்பொன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் 2029 ஆம் ஆண்டு டொலர் தாள்கள், இந்த காலாண்டில் சுமார் 15% சரிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இது கடந்த வருடம் முதலீட்டாளர்களுக்கு 70% வருவாயை வழங்கியதைத் தொடர்ந்து சிறந்த திருப்பமாகும். வளர்ந்து வரும் சந்தைகளில் இது சிறந்த ஒன்றாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...