புதிய ஜனாதிபதிக்கு சீனா, ஜப்பான் மாலைதீவு உள்ளிட்ட பல நாடுகளின் தலைவா்கள் வாழ்த்து!

Date:

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பல நாடுகளின் தலைவா்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனா்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவை நேற்று (22)  சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளமைக்காக அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இந்திய உயர்ஸ்தானிகள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளின் நீண்டகால உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிப்பதாகவும் கூறினார்.

பெய்ஜிங்கில் இருந்து அனுப்பிய செய்தியில் சீன ஜனாதிபதி, 67 ஆண்டுகளுக்கும் மேலாக செழித்தோங்கியிருக்கும் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை எடுத்துரைத்தார்.

இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் விரிவுபடுத்தியுள்ள பரஸ்பர புரிதல் மற்றும் ஆதரவை அவர் பாராட்டினார். பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் சீன பட்டுப்பாதை முன்முயற்சியின் கொள்கைகளில் அடித்தளமாக இருக்கும் மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை ஜனாதிபதி ஷி ஜின்பிங் வெளிப்படுத்தினார்.

மேலும், சீனா-இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு நான் அதிக முக்கியத்துவம் அளித்து, நமது பாரம்பரிய நட்புறவை கூட்டாக முன்னெடுத்துச் செல்வதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...