புத்தளம் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான விசேட செயலமர்வு..!

Date:

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கான பணிகளில் பல அமைப்புக்கள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இலங்கையின் பழமை வாய்ந்த தேர்தல் கண்காணிப்பு நிலையமான “பெப்ரல்” அமைப்பு, புத்தளம் மாவட்டத்தில் தபால் வாக்களிப்புக்கான தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தெரிவு செய்யபட்டவர்களுக்கான ஒரு முழுநாள் பயற்சி பட்டறை இன்று புத்ததளம் ரம்ய லங்கா நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முக்கிய வளவாளராக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திரு. தினேஷ் பெரேரா கலந்து கொண்டு தேவையான பயிற்சிகளை வழங்கியதோடு , மாவட்ட ‘பெப்ரல்’ ஒருங்கிணைப்பாளர் திரு, ருமைஷ் , கள ஒருங்கிணைப்பாளர் தரிந்து ஆகியோரும் வளவாளர்களாக கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினார்கள்.

நடைபெறவிருக்கின்ற இத் தேர்தலை மிக சிறப்பாக கண்காணிக்கும் வகையில் பெப்ரல் அமைப்பு முழுமையான ஏற்பாட்டை செய்துள்ளது.

மாவட்டத்தில் இருக்கின்ற சகல தேர்தல் தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய வகையில், தெரிவு செய்யப்பட்ட கண்காணிப்பாளர்களுக்கு இன்று அதற்கான நியமனங்கள் வழங்கப்பட்டதோடு, அவர்கள் எவ்வாறு தேர்தல் பணியில் ஈடுபடுவது என்பது தொடர்பான பயிற்சிகளும் டிஜிட்டல் ஊடாக எவ்வாறு தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது என்பதற்கான முன்மாதிரி பயிற்சிகளும் இன்றைய நிகழ்வில் செயற்படுத்திக் காட்டப்பட்டது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...