பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு !

Date:

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில், “குறிப்பிட்ட விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் பேருந்து கட்டணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

10 ரூபாவினால் எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறைப்பு பேருந்து கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றத்திற்கு போதுமானது அல்ல.

பேருந்து கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்றால் எரிபொருளின் விலை 25 ரூபாவினால் சரி குறைக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....