பொதுத் தேர்தலுக்கான மொத்த செலவுகளை விடுவித்தார் ஜனாதிபதி

Date:

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் பத்திரத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (28) இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் பொதுச் செயலாளர் அலுவலகத்தில் பொதுத் தேர்தல் தொடர்பான ஆரம்ப விடயங்கள் குறித்து இரண்டு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதி மாவட்ட செயலாளர்களின் பங்குபற்றலுடன் முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவும் அதில் கலந்துகொண்டுள்ளார்.

 

Popular

More like this
Related

வரலாற்றுச் சிறப்புமிக்க அங்காரா மஸ்ஜிதில் ஜும்ஆ உரை நிகழ்த்திய இலங்கை மாணவர்!

இலங்கையைச் சேர்ந்த மாணவர் Fathhy Yakan Nagoor Gafoordeen துருக்கியின் தலைநகர்...

நாட்டின் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப்...

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்களின் செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட...