வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களில் இதையெல்லாம் செய்யக்கூடாது!

Date:

வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடாத விடயங்கள் குறித்து வாக்காளர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளனர்.

குறித்த அறிவுறுத்தலை ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

“குடிமக்கள் செல்லும் போது நிதானமாக இருக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.காலையில் மது அருந்திவிட்டு வாக்குச்சாவடிக்குள் நுழைய முடியாமல், முடிவெடுக்க முடியாமல் திணறுபவர்கள் இருப்பதை நம் அனுபவத்தில் பார்த்துள்ளளோம்.

அத்தோடு, வாக்குச்சாவடிகளில் உள்ளவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாக்குச்சாவடிக்கு வர வேண்டும்.

மேலும், சிலர் கூரிய ஆயுதங்கள் மற்றும் சிறு கத்திகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வாக்களிக்க வரும் சம்பவங்களை நாங்கள் அனுபவித்திருக்கிறோம்.

ஒரு வேளை நீங்கள் வேலைக்குச் சென்று வாக்களிக்க செல்வீர்களானால் இது போன்ற செயல்களைச் செய்யாதீர்கள்.

எனவே இது போன்ற சிறிய சம்பவம் வாக்குச்சாவடியை சீர்குலைத்தால், அது முழு வாக்குப்பதிவு செயல்முறையையும் தடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...