அரகலய காணொளிகளை பகிரும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Date:

அரசியல் ஆதாயத்திற்காக 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது வன்முறை நிகழ்வுகள் தொடர்பான தவறான காணொளிகளை பகிரும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் வாகன சோதனைகள் மற்றும் 2022 மே 9 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த காட்சிகள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களின் காணொளிகள் சமூக ஊடகங்களில் மீளப் பரப்பப்படுவது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த காணொளிகள் கடந்த கால நிகழ்வுகளை நடப்பு நிகழ்வுகளாக காட்டி தவறான கதையை உருவாக்கி, பொதுமக்களை தவறாக வழிநடத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இருப்பதா பொலிஸார் குறிப்பிட்டனர்.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பதிவிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...